அய்யம்பேட்டை (தஞ்சாவூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யம்பேட்டை
—  பேரூராட்சி  —
அய்யம்பேட்டை
இருப்பிடம்: அய்யம்பேட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°54′N 79°11′E / 10.9°N 79.18°E / 10.9; 79.18ஆள்கூறுகள்: 10°54′N 79°11′E / 10.9°N 79.18°E / 10.9; 79.18
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பாபநாசம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,263 (2011)

2,104/km2 (5,449/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.73 சதுர கிலோமீட்டர்கள் (2.98 sq mi)

28 மீட்டர்கள் (92 ft)

இணையதளம் www.townpanchayat.in/ayyampettai


அய்யம்பேட்டை (ஆங்கிலம்:Ayyampettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அதிகம் சௌராட்டிர மக்களும், இசுலாமியர்களும் வாழ்கிறார்கள். இங்கு இரயில் நிலையம் ஒன்றும், பழமையான பள்ளியும் உள்ளன.

அய்யம்பேட்டை பேரூராட்சியில் பிரசன்ன ராஜகோபாலசாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. . மேலும் ஸ்ரீ சக்கரவாக்கீஸ்வரர் சுவாமி கண்ணாடி பல்லக்கில் ஏழு ஊர் சுற்றி வலம்வரும் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை நகரில் பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

அமைவிடம்[தொகு]

அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு கிழக்கே கும்பகோணம் 24 கிமீ; மேற்கே தஞ்சாவூர் 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

7.73 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 186 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,106 வீடுகளும், 16,263 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°54′N 79°11′E / 10.9°N 79.18°E / 10.9; 79.18 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 28 மீட்டர் (91 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. அய்யம்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
  4. Ayyampettai Population Census 2011
  5. Ayyampettai Town Panchayat
  6. "Ayyampettai". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]