ஒரத்தநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரத்தநாடு
—  பேரூராட்சி  —
ஒரத்தநாடு
இருப்பிடம்: ஒரத்தநாடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°37′N 79°16′E / 10.62, 79.27அமைவு: 10°37′N 79°16′E / 10.62, 79.27
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் முனைவர் N. சுப்பையன் . இ .ஆ .ப [3]
பெருந்தலைவர் சே. திருமங்கை
சட்டமன்றத் தொகுதி ஒரத்தநாடு
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். வைத்திலிங்கம் (அதிமுக)

மக்கள் தொகை 10,172 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


2 மீட்டர்s (6.6 அடி)


ஒரத்தநாடு (ஆங்கிலம்: Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேருராட்சி ஆகும்.[4]

பெயர்க்காரணம்[தொகு]

ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழன் உறந்தையர்கோன் எனப்பட்டான். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது. [5]

மக்கள்[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாடு கல்லூரிகளிலோ,தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

விளையாட்டு[தொகு]

துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உள்ளூர் அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் அதிகரித்திருக்கின்றன. விழாக்காலங்களில் பரிசுப் போட்டிகளும் நடத்தப்பெறுகின்றன.

கல்லூரிகள்[தொகு]

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி மகளிர் கலைக்கல்லூரி இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது. இக்கல்லூரி இங்கு அமைந்ததன் மூலம் கல்வி அறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அரசு கல்வியல் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. அரசு கால்நடை மருத்துவ கல்லூரி இங்கு அமைந்துள்ளது

ஆலயம்[தொகு]

இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது மாபெரும் ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.

ஆட்சி[தொகு]

ஒரத்தநாடு வட்டத்தின் அரசுத் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைந்துள்ளன.

போக்குவரத்து[தொகு]

ஓரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூருக்கும்,பட்டுக்கோட்டைக்கும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கபடுகிறது.மேலும் மன்னார்குடி,கறம்பக்குடி,கந்தர்வக்கோட்டை,புதுக்கோட்டை போன்ற ஊர்களுக்கும் அடிக்கடி பேருந்துகள் இயக்கபடுகிறது.ஓரத்தநாட்டை பொருந்த வரை அதிக படியாக தனியார் பேருந்துகளே இயக்கபடுகின்றன.சுற்றியுள்ள கிராமங்களுக்கு சிற்றுந்துகள் இயக்கபடுகின்றன.ஒரத்தநாடு நகரில் அரசு பஸ் பனிமனை அமைத்துள்ளதால் பேருந்து வசதி இங்கு சிறப்பாக அமைத்துள்ளது

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  5. உறந்தைவளர் நாட்டுவளப்பம், சின்னப்பன் சேதிராயர்
  6. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒரத்தநாடு&oldid=1574161" இருந்து மீள்விக்கப்பட்டது