மருந்துக்கோட்டை
Jump to navigation
Jump to search
மருந்துக்கோட்டை பத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 400 அடி உயரத்தில் குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது மருந்துக்கோட்டை. பத்மனாபபுரம் கோட்டை வடிவிலேயே இந்தக்கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்பரப்பில் 5 கொத்தளங்களும், பெரிய கல்மண்டபம் ஒன்றும் உள்ளது. கோட்டையின் மேற்பரப்பு இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. உதயகிரி கோட்டையில் உருவாக்கப்பட்ட பீரங்கி படைத்தளத்திற்கு தேவையான வெடி மருந்துகளைத் தயாரிக்கவும், தேவையான வெடி மருந்துகளை பதுக்கி வைக்கவும் இந்தக் கோட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதயகிரிக்கோட்டையில் இருந்து இந்த மருந்துக்கோட்டைக்கு சுரங்கப்பாதைகள் இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.