பத்மநாபபுரம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகாமையில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது கல்குளம் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனையாதலால் இது கேரளா அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது, கேரள அரசின் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படுகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி கருங்கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான வேளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இந்த அரண்மனையானது 1298 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் பொ.வ 1601 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனையானது கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பொ.வ 1795 ஆம் ஆண்டு தலைநகரம் இவ்வரண்மனையிலிருந்து (பத்மனாபபுரம்) திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அரண்மனை வளாகத்தில் உள்ள உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் உள்ளது.[1]

முக்கியமான கட்டிடங்கள்[தொகு]

  • மந்திர சாலை - அரசர் மந்திராலோசனை செய்யுமிடம்
  • தாய்க் கொட்டாரம் - பொ.வ 1550 ற்கு முன் கட்டப்பட்டது.
  • நாடக சாலை
  • நான்கடுக்கு மாளிகை - அரண்மனையின் மையத்தில் அமைந்துள்ளது. முதல் தளத்தில் அரசரின் படுக்கை அறைகள் அமைந்துள்ளது. அவற்றின் சுவர்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் அரசர் படிப்பதற்கான அறைகளும் உபவாசம் இருப்பதற்கான அறைகளும் உள்ளன. மேல் தளத்தில் பூஜை அறை அமைதுள்ளது.
  • தெற்குக் கொட்டாரம் -தாய்க் கொட்டாரத்தினைப் போன்றே பழமையானது. தற்போது அருங்காட்சியமாக செயல்படுகிறது.
அரண்மனை உச்சியில் அமைந்துள்ள மணிக்கூண்டு
மந்திரசாலை

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. முனைவர் தா.அனிதா (2018 அக்டோபர் 18). "கம்பன் வணங்கிய கலைமகள்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 19 அக்டோபர் 2018.

ஆள்கூறுகள்: 8°15′03″N 77°19′36″E / 8.250916°N 77.326702°E / 8.250916; 77.326702