ஃபெரோஸ் ஷா கோட்லா
Appearance
- இப்பக்கம் கோட்டையைப் பற்றியது. கிரிக்கெட் விளையாட்டரங்கம் பற்றி அறிய, ஃபெரோஸ் ஷா கோட்லா விளையாட்டரங்கம் கட்டுரையைப் பார்க்கவும்.
ஃபெரோஸ் ஷா கோட்லா (Feroz Shah Kotla) (இந்தி: फ़िरोज़ शाह कोटला, Punjabi: ਫ਼ਿਰੋਜ਼ ਸ਼ਾਹ ਕੋਟਲਾ, உருது: فروز شاہ کوٹلا) என்பது ஃபெரோஸ் ஷா துக்ளக்கால் நிறுவப்பட்ட ஒரு கோட்டை.
தில்லி சுல்தானாக இருந்த ஃபெரோஸ் ஷா துக்ளக் யமுனை நதிக்கரையில் தனது பெயரில் ஃபெரோஸா பாத் என்ற தலைநகரை உருவாக்கி அங்கே இக்கோட்டையை நிறுவினார். அம்பாலாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அசோகர் காலத்து ஸ்தூபி இக்கோட்டையின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
1947 இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த சீக்கியர்கள் மற்றும் சில இந்துக்கள் தற்காலிகமாக இக்கோட்டையில் தங்க வைக்கப்பட்டனர். மறுகுடியமர்த்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் இங்கேயே தங்கி விட்டனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Krishnadas Rajagopal (Aug 17, 2008). "Time over, Kotla refugee colony still a shuttlecock". Expressindia. பார்க்கப்பட்ட நாள் June 24, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]