ஜெகதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகதேவி மலைக் கோட்டை

ஜெகதேவி (Jagadevi) அல்லது ஜெகதேவி துர்க்கம் என்னும் ஊர், கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் கிருட்டிணகிரியிலிருந்து கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவிலும், பர்கூரிலிருந்து 9 கி.மீ தொலைவிலும் உள்ளது. [1]

கோட்டை[தொகு]

இந்த ஊரின் அருகில் மலையில் கோட்டை உள்ளது. இது ஒரு இரட்டை மலைக்கோட்டை ஆகும். இம்மலையின் உயரம் 2647 அடி. இம்மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்களும், தானியக் களஞ்சியங்களும், சுனைகளும் உள்ளன. இக்கோட்டை ஐதர் அலி, திப்புசுல்தான் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது.[2] இது ஜெகதேவிராயர்களின் தலைநகராக விளங்கியது.கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Bargur/Jagadevi
  2. தகடூர் வரலாறும் பண்பாடும்,இரா.இராமகிருட்டிணன்.பக்-305
  3. http://krishnagiri.nic.in/history.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதேவி&oldid=3483238" இலிருந்து மீள்விக்கப்பட்டது