தஞ்சாவூர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் கோட்டை தஞ்சை நாயக்க மன்னர்களால் பதினாறு மற்றும் பதெனேழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோட்டை ஆகும். தஞ்சைக் கோட்டை சிறிய கோட்டை, பெரிய கோட்டை என இருபகுதிகளைக் கொண்டது. "சிறிய கோட்டை" என்பது "பெரிய கோட்டை" என்றழைக்கப்படும் கோட்டைக்கு காலத்தால் முந்தியதாகும். இது பெரிய கோட்டையின் தென்மேற்கே அமைந்துள்ளது. இச்சிறிய கோட்டையிலே தான் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் காணப்படுகிறது. கோட்டையின் வடக்கில் கிறித்தவ ஆலயம், சிவகங்கைப் பூங்கா, குளம் ஆகியன உள்ளன. 1871-72 இல் தஞ்சை மாநகராட்சியால் சிவகங்கைப் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பூங்காவின் தெற்கில் பிரகதீசுவரர் கோவில் அமைந்துள்ளது. சிறிய கோட்டையை அடுத்து தஞ்சை நகரைச் சுற்றிப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. இப்பெரிய கோட்டையின் வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கோட்டையின் எஞ்சிய பகுதிகளையும், அகழியையும் இன்றும் காணலாம். பெரிய கோட்டையின் தெற்குப்பகுதி முற்றிலும் அழிவுற்றுள்ளது. அகழி மட்டும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. வி. கந்தசாமி (2011 (மூன்றாம் பதிப்பு)). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-008-6. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_கோட்டை&oldid=3664271" இலிருந்து மீள்விக்கப்பட்டது