ஈரோடு கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈரோடு கோட்டை
பகுதி: தமிழ்நாடு
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
ஈரோடு கோட்டை is located in தமிழ் நாடு
ஈரோடு கோட்டை
ஈரோடு கோட்டை
வகை கோட்டைகள்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தமிழ்நாடு அரசு
நிலைமை அழிபாடு
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
மண்

ஈரோடு கோட்டை என்பது ஈரோட்டில் இருந்த ஒரு கோட்டை ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருந்தது. 1800 ஆண்டில் பயணியும் வரலாற்றாளருமான பிரான்சிசு புக்கானன் என்பவர் எழுதிய குறிப்பின்படி, இது ஒரு பெரிய மண் கோட்டையாக இருந்தது. இங்கே ஒரு படைப்பிரிவு வீரர்கள் இருந்ததாகவும், இப்பகுதியில் படைக்குப் போதிய அளவில் ஆட்களைத் திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி மீடோசு படையெடுத்து வந்த காலத்தில் இக் கோட்டை ஏறத்தாழ முற்றாகவே அழிந்து விட்டது.[1] பிறகு, மக்களின் நிவாரணப்பணிக்காக அழிவுற்ற மண்கோட்டையினை சீர் செய்து சுற்றியிருந்த அகழியையும் நிரப்பினார்கள். முன்பு அகழியிருந்த பகுதியே தற்பொழுது அகழிமேடு என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் தற்போதும் கோட்டை என்ற பெயர் வழக்கில் உள்ளது. ஈரோட்டில் உள்ள மணிக்கூண்டிற்கு மேற்கே அகழிமேடு வரை உள்ள பகுதியை கோட்டை என்றும், மணிக்கூண்டிற்கு கிழக்கே காலிஙராயன் கால்வாய் வரை உள்ள பகுதியை பேட்டை என்றும் அழைத்து வருகின்றனர்.

இந்த கோட்டையையும் பேட்டையையும் உள்ளடக்கி அமையப்பெற்றதே ஈரோட்டின் பழைய நகராட்சி பகுதியாகும். அதுவே தற்போதைய ஈரோட்டின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Erode Fort". The Hindu (Chennai, India). 18 January 2009. http://www.hindu.com/2009/01/18/stories/2009011854990500.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_கோட்டை&oldid=2971701" இருந்து மீள்விக்கப்பட்டது