நாகப்பட்டினம் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18 ஆம் நூற்றாண்டைய கோட்டை வரைபடம்

நாகப்பட்டினம் கோட்டை (Fort Vijf Sinnen அல்லது Vyf Sinnen, டச்சு மொழியில் "ஐம்பலன்கள்" என்று பொருள்) என்பது தமிழகத்தின், நாகபட்டினத்தில் இருந்த ஒரு டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையாகும். இது டச்சு சோழமண்டலக் கடற்கரையின் ஒரு பகுதியாக (1610-1798) இருந்தது. இது டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத்தைப் பாதுகாக்க கட்டப்பட்டது ஆகும். 1690 இல் பழவேற்காடு கோட்டையில் இருந்து தலைநகரை டச்சுக்கார்கள் இங்கு மாற்றினர். மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் கோட்டை துவங்கியது. 1781 இல் மிகுதியான ஆயுதங்கள் தாங்கிய இந்தக் கோட்டை பயனற்றது என்று நிரூபிக்கப்பட்டது. இந்த ஆண்டில் நிகழ்ந்த நாகப்பட்டினம் முற்றுகையின்போது பிரித்தானியரிடம் கோட்டை வீழ்ந்தது. ஆம் 1784 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் காரணமாக நான்காவது ஆங்கிலோ-டச்சு போர் முடிவடைந்த்து. ஆங்கிலோ-டச்சு போரின் ஒரு களமாக இந்தக்கோட்டை விளங்கியது. இதன்பிறகு இங்கு டச்சு ஆட்சி நிலைநாட்டப்படாமல் போயிற்று. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ratnatunga, Kavan U. (2006). "Paliakate - VOC Kas Copper Dumps, 1646 - 1794 - Dutch India]". Dutch India coins - Pulicat. lakdiva.org. பார்க்கப்பட்ட நாள் 2008-12-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பட்டினம்_கோட்டை&oldid=2992364" இலிருந்து மீள்விக்கப்பட்டது