ஓவர்பரிஸ் பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓவர்பரிஸ் ஃபாலி
ஓவர்பரிஸ் பாலி
ஓவர்பரிஸ் பாலி
இரவும் தோற்றம்
அரேபிய கடலின் தோற்றம் - ஓவர்பரிஸ் பாலியில் இருந்து

ஓவர்பரி'ஸ் ஃபாலி (Overbury's Folly) என்பது மணிக்கூண்டு கோபுரத்துடன் கூடிய வட்டவடிவ காலனியக் காலகட்ட மாளிகையும் ஒரு கடலோர பூங்காவாகும். இது இந்தியாவின் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் மலபார் கடற்கரையில் உள்ள வணிக நகரமான தலச்சேரியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தலசேரியில் 1870 களில் உள்ளூர் நீதிபதியாக பணியாற்றிய அதன் பில்டர் ஈ.என். ஓவர்பரியின் பெயர் இதற்கு இடப்பட்டது.

1879 ஆம் ஆண்டில், ஓவர்பரி கடற்கரை ஓரமுள்ள குன்றில் ஒரு சுற்றுலாப் பகுதியைக் கட்ட விரும்பினார். ஆனால் அவரால் அந்தப் பணியை முடிக்க முடியவில்லை, ஆனால் இந்த இடம் பின்னர் "ஓவர்பரிஸ் பாரி" என்ற பெயரைப் பெற்றது. இது அரேபிய கடலின் வியத்தகு காட்சிகளைக் காண உதவுகிறது.

இன்று, ஓவர்பரிஸ் பாலியில் உள்ள கட்டம் ஒரு சுற்றுலா தலமாக புதுப்பிக்கப்பட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சூரியனின் மறைவை பொறுமையாகக் காண விரும்பும் உள்ளுர் மக்கள் இங்கு அடிக்கடி வருகிறன்றனர். கடலோரப் பகுதியான இங்கு திறந்தவெளி காபி கடையும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவர்பரிஸ்_பாலி&oldid=3040172" இலிருந்து மீள்விக்கப்பட்டது