பசவகல்யாணக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசவகல்யாண கோட்டை
பகுதி: பசவகல்யாண் நகரம், பீதர் மாவட்டம், கர்நாடகம்
பசவகல்யாண், இந்தியா
Basava Kalyan Fort.JPG
பசவகல்யானக் கோட்டையின் தோற்றம்
பசவகல்யாண கோட்டை is located in கருநாடகம்
பசவகல்யாண கோட்டை
பசவகல்யாண கோட்டை
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கர்நாடக அரசு
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை சிதைவுற்றது
இட வரலாறு
கட்டிய காலம் 12 ஆம் நூற்றாண்டு
கட்டியவர் கல்யாணி சாளுக்கியர்
சண்டைகள்/போர்கள் பல

பசவகல்யாணக் கோட்டை (Basavakalyana fort), இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பீதர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் "கல்யாணக் கோட்டை" என அழைக்கப்பட்டது. இதன் வரலாற்றுச் சிறப்பு 10 ஆம் நூற்றாண்டு காலத்தியது. 10 ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர்களின் தலைநகரம் மன்யகேடாவிலிருந்து கல்யாணுக்கு மாற்றப்பட்டது. பசவகல்யாண நகரின் முக்கியப்பகுதியாக விளங்கும் இக்கோட்டை, வீரசைவ சமுதாயத்தை நிறுவிய பசவண்ணரின் கர்மபூமி என்ற சிறப்புமுடையது. [1][2][3][4]

வீர சைவ சமுதாயத்தைத் தோற்றுவித்த பசவண்ணரால் இக்கோட்டை 12ஆம் நூற்றாண்டின் சமுதாய, சமய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மேலும் கல்வியில் சிறந்தும் விளங்கியது. இந்து சமயத்தின் சாதியம் மற்றும் பழங்கொள்கைகளை எதிர்த்துப் புதிய சீர்திருத்த சமயமாக வீர சைவத்தைத் தோற்றிவித்த பசவண்ணர் மற்றும் அக்கா மகாதேவி, சன்னபசவண்ணர் (Channabasavanna), சித்தராமர் போன்ற பல சரணர்களுக்கும் பசவகல்யாணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.[5]


புவியமைவிடம்[தொகு]

சராசரியாக 2,082 அடிகள் (635 m) உயரத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது. இதன் ஆள்கூறுகள்: 17°52′N 76°57′E / 17.87°N 76.95°E / 17.87; 76.95.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Murthy, A. V. Narasimha; Bairathnahalli Krishnamurthy Gururaja Rao (1983). Rangavalli, recent researches in Indology: Sri S.R. Rao felicitation volume. Sundeep. பக். 294. http://books.google.com/?id=b8-1AAAAIAAJ&q=Kalyana+fort&dq=Kalyana+fort&cd=60. பார்த்த நாள்: 2010-01-28. 
  2. Joshi, S.K (1985). Defence architecture in early Karnataka. Sundeep Prakashan. பக். 25. http://books.google.co.in/books?id=vOe4AAAAIAAJ&q=Kalyana+fort&dq=Kalyana+fort&cd=1. பார்த்த நாள்: 2010-01-28. 
  3. "Mounments of Basavakalyan". National Informatics Centre. 2009-10-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-28 அன்று பார்க்கப்பட்டது.
  4. "journey into the past". Institute of Oriental Study, Thane. 2008-05-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Basavakalyan". 2009-05-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-05-08 அன்று பார்க்கப்பட்டது.
  6. Falling Rain Genomics, Inc - Basavakalyan

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசவகல்யாணக்_கோட்டை&oldid=3575499" இருந்து மீள்விக்கப்பட்டது