புனித டேவிட் கோட்டை
புனித டேவிட் கோட்டை | |
---|---|
பகுதி: தமிழ் நாடு | |
கடலூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா | |
புனித டேவிட் கோட்டை | |
ஆள்கூறுகள் | 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழ்நாடு அரசு |
நிலைமை | இடிபாடுகள் |
புனித டேவிட் கோட்டை கடலூா் அருகிலுள்ள ஒரு பிரித்தானியக் கோட்டையாகும். இது இந்தியாவின் சோழ மண்டல கடற்கரையோரமாகச் சென்னையில் இருந்து நூறு மைல்கள் தொலைவில் கடலூர் அருகே உள்ளது. இது 1650 இல் மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 இல் ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.
வரலாறு
[தொகு]கெடிலம் ஆற்றங்கரையில் அழிபாடுகளாக உள்ள புனித டேவிட் கோட்டை குறிப்பிடத்தக்க வரலாற்றை உடையது. செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677 இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன. இதன்பிறகு இக்கோட்டைக்கு சென்னை ஆளுநரான எலிகு யேல், புனித டேவிட் கோட்டை என்று பெயரிட்டார்.[1] மேலும் கோட்டையை வலுப்படுத்தானார். கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது.
கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக கோட்டை விரிவுபடுத்தப்பட்டதோடு வலுப்படுத்தவும் பட்டு வந்தது. 1745இல் ராபர்ட் கிளைவ் இதன் காவலில் நன்கு கவனம் செலுத்தினார்.[2]
தெனிந்தியத் தலைநகர்
[தொகு]கி.பி. 1746ஆம் ஆண்டில் இக்கோட்டை பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் பிரெஞ்சு ஆளுனர் டூப்ளேயின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. 1756ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் பிரித்தானிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். பிரெஞ்சுக்காரா்கள் இதனை 1758ஆம் ஆண்டு கைப்பற்றினார். 1782ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்ட இக்கோட்டை 1783ஆம் ஆண்டு பிரித்தானியர் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பாதுகாக்கப்பட்டது. அதன் பின் 1785ஆம் ஆண்டு இறுதியாக பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Encyclopædia Britannica entry on Fort St David
- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன்
தமிழாய்வகம். p. 400. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.