நாகப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகபட்டினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நாகப்பட்டினம்
—  சிறப்புநிலை நகராட்சி  —
நாகப்பட்டினம்
இருப்பிடம்: நாகப்பட்டினம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°46′N 79°50′E / 10.77°N 79.83°E / 10.77; 79.83ஆள்கூற்று: 10°46′N 79°50′E / 10.77°N 79.83°E / 10.77; 79.83
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சித் தலைவர் மஞ்சுளாசந்திரமோகன்
ஆணையர்
மக்களவைத் தொகுதி நாகப்பட்டினம்
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3533967(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3533967)

மக்கள் தொகை

அடர்த்தி

1,02,838 (2011)

6,893/km2 (17,853/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.92 சதுர கிலோமீட்டர்கள் (5.76 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/Nagapattinam


ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு

நாகப்பட்டினம் நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் 1991 அக்டோபர் 18 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதால், 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள். நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[3]

அமைவிடம்[தொகு]

வங்காள குடாக் கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட அகலக்கோடுகள் 10.10' க்கும் 11.20' க்கும் இடையிலும், கிழக்கு நெடுங்கோடுகள் 79.15', 79.50' ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு தீபகற்பக் கழிமுகப் (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் பாக்கு நீரிணையும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.

நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது[சான்று தேவை].

நாகப்பட்டினம் சப்தஸ்தானம்[தொகு]

நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.[4]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

 • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.
 • அரசு தொழில் பயிற்சி நிறுவனம்
 • வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி
 • இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி
 • ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி
 • ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)
 • ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)
 • மீன்வளப் பல்கலைக் கழகம்.
 • பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.
 • பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
 4. நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பட்டினம்&oldid=2786024" இருந்து மீள்விக்கப்பட்டது