திருக்கோடிக்காவல்
திருக்கோடிக்காவல் | |||
— கிராமம் — | |||
அமைவிடம் | 11°04′16″N 79°31′16″E / 11.071°N 79.521°Eஆள்கூறுகள்: 11°04′16″N 79°31′16″E / 11.071°N 79.521°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
திருக்கோடிக்காவல் தமிழ் நாடு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலூக்காவிலுள்ள ஒரு ஊராகும் [4].
அமைவிடம்[தொகு]
இது காவிரியின் வடபாகத்தில் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது. நில நேர்க்கோடு 11.071 நில நிரைக்கோடு 79.521 இந்த ஊரின் அமைவிடம்.
நவக்கிரக தலங்களான சூரியனார் கோயில், கஞ்சனூர் என்பவற்றோடு, மகாராஜபுரம், கதிராமங்கலம் ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்[தொகு]
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். [5]
சிறப்பு[தொகு]
பாடல் பெற்ற தலமான திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.
திருக்கோடிக்காவல் பல சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாகும். திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் வயலின் வாத்தியத்தில் பல நுட்பங்களைப் புகுத்தியவர். அவரே கருநாடக இசைக் கச்சேரிகளில் வயலின் வாத்தியத்தைப் பிரபலப்படுத்தினார் என்ற கருத்தும் உண்டு. செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரின் மருகர் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002