ஆவூர் (கும்பகோணம்)
திருநல்லூர் சப்தஸ்தானங்களுள் ஒன்று ஆவூர் ஆகும். பிற தலங்கள் - திருநல்லூர், கோவிந்தக்குடி, மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை ஆகியவையாகும். [1]
அமைவிடம்
[தொகு]ஆவூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில்இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பட்டீஸ்வரம் வந்து, கோவிந்தக்குடி அடுத்து இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து, கோவிந்தக்குடி வழியாக இத்தலத்திற்குச் செல்லலாம். பிரமன் அறிவுரைப்படி காமதேனு வழிபட்டதால் ஆவூர் எனப்படுகிறது.
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் பசுபதீஸ்வரர், இறைவி மங்களநாயகி.
பாடியோர்
[தொகு]திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பற்றி திருஆவூர்ப்பசுபதீச்சரம் பதிகத்தில் பின்வருமாறு போற்றுகிறார்.
"விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதவாவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே"
போக்குவரத்து
[தொகு]தொழில்
[தொகு]நில, நீர் வளம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
வெளி இணைப்புகள்
[தொகு]http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_avurp_pacupaticcaram.htm பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்