உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரமௌலீசுவரர் கோயில், தாழமங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாழமங்கை சந்தரமௌலீசுவரர் கோயில்
பெயர்
பெயர்:தாழமங்கை சந்தரமௌலீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:அய்யம்பேட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சந்திரமௌலீசுவரர்
தாயார்:ராஜராஜேஸ்வரி

சந்திரமௌலீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயிலுக்கு முன்பாக சாலையின் மேற்புறம் உள்ளது.

தல வரலாறு

[தொகு]

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன் ஆறாவது தலமான இத்தலம் தாழமங்கையில் உள்ளது. இத்தலம் சோழர்களுக்கு முன் ஆண்ட முத்தரையர்கள் காலத்து கோயில். இக்கோயிலுக்குக் கிழக்கிலுள்ள திருக்குளத்தில் பூர்ண சந்திரனின் கிரணங்கள் பிரதிபலித்து கோயிலுள்ள இறைவனைப் பூஜித்ததால் இறைவனின் திருநாமம் சந்திரமௌலீஸ்வரர் என்றாயிற்று என்கிறது தலபுராணம். இத்தலத்திற்கு வரும் பல்லக்கு நிற்கக்கூட நேரமின்றி தீபாராதனையுடன் புறப்பட்டு விடும். [1]

இறைவன், இறைவி

[தொகு]

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், பொன்னார்மேனியர். இறைவி ஸ்ரீராஜராஜேஸ்வரி.

கல்வெட்டு

[தொகு]

செந்தலைத் தூண் கல்வெட்டுக்களில் காணப்படும் நித்தவினோதவளநாட்டு கிழார் கூற்றத்து பவதாயமங்கலமே மருவி இன்று தாழமங்கை எனப்படுகிறது. இதனை ஒட்டியே சுவடழிந்து போன சங்க காலம் தொட்டுப் புகழ்பெற்ற பெருநகரமான கிழார் இருந்திருக்கிறது. [1]

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்

[தொகு]

சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் 2004 சிறப்பு மலர்