உள்ளடக்கத்துக்குச் செல்

புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் விமானம்

புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்

[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலின் தென்புறம் தஞ்சாவூர்-திருவாரூர் சாலையையொட்டி, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.[3]

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலிலுள்ள இறைவன் கைலாசநாதர் ஆவார். மூலவர் சன்னதியின் முன்பாக பலிபீடம், நந்தி உள்ளது. நால்வர் சிலைகள் அங்கே காணப்படுகின்றன. சன்னதியின் இடப்புறம் இறைவி கல்யாணசுந்தரி சன்னதி உள்ளது. கோயிலின் திருச்சுற்றில் கன்னிமூல கணபதி, அய்யப்பன், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நாகர், கஜலட்சுமி, வினைதீர்க்கும் ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், சொர்ண பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவர் கருவறையின் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.82
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.82
  3. திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, சென்னை, 2014

வெளி இணைப்புகள்

[தொகு]