உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் மணிகர்ணிகேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிகர்ணிகேஸ்வரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:மணிகர்ணிகேஸ்வரர்

தஞ்சாவூர் மணிகர்ணிகேஸ்வரர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்

[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் இரண்டாம் சரபோஜி மன்னர் காசி யாத்திரை சென்றபோது மணிகர்ணிகைத் துறையில் நீராடியதை நினைவுபடுத்தும்வகையில் கட்டப்பட்ட கோயிலாகும்.[2]

அமைப்பு

[தொகு]

இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், திருச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. மூலவர் சன்னதியின் முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவர் மணிகர்ணிகேஸ்வரர் கருவறையின் இடப்புறம் மங்களநாயகி அம்மன் சன்னதி உள்ளது. உள் மண்டபத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் உள்ளனர். கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சித்தி புத்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. அருகே நாகர்கள் காணப்படுகின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதி, துர்க்கை சன்னதியும் அடுத்தடுத்து உள்ளன. தொடர்ந்து சனீஸ்வரர், பைரவர், சூரியன் உள்ளனர்.

மூலவர்

[தொகு]

இக்கோயிலின் மூலவராக மணிகர்ணிகேஸ்வரர் உள்ளார். இறைவி மங்களநாயகி அம்மன் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, பக்.162