தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்

தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

இருப்பிடம்[தொகு]

இக்கோயில் தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில், வெள்ளை விநாயகர் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. [1] [2] [கு 1]

அமைப்பு[தொகு]

மூலவர் சன்னதிக்கு எதிரில் சூலம், பலி பீடம், கொடி மரம், சிங்கம் ஆகியவை காணப்படுகின்றன. திருச்சுற்றில் ஏனாதிநாய நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன் ஆகியோர் உள்ளனர். வேப்ப மரத்தின் அருகே நாக சிற்பங்கள் உள்ளன. அடுத்து நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறம் செல்வ விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும் உள்ளனர். [1] இக்கோயில் நுழைவாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, மூலவர் விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. 29 ஆகஸ்டு1988 திங்கட்கிழமை அன்று இக்கோயிலுக்கான கால்கோள் விழா வாளமர் கோட்டை காத்தையா சுவாமிகளால் நடத்தப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக உஜ்ஜயினி மாகாளியம்மன் அமர்ந்த கோலத்தில், கிழக்கு பார்த்த நிலையில் உள்ளார். [2]

வரலாறு[தொகு]

வெளியூரில் இருந்து ஒரு குடும்பத்தார் வணிகம் செய்வதற்காக தஞ்சாவூர் வந்தபோது அவர்களுடன் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியும், அவளது அண்ணனும் உடன் வந்தனர். தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அந்த குடும்பத்தார் தங்கி இருந்தனர். அனைவரும் வெளியில் சென்றபோது, சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள். சிறிது நேரத்திற்குப்பிறகு அனைவரும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டதைக் கண்டனர். வெளியில் இருந்து அழைத்தும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே, கதவை உடைத்தபோது உள்ளே சிறுமி ஒரு சிலையாக காட்சியளிப்பதைக் கண்டனர். பின்பு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். [2]

குடமுழுக்கு[தொகு]

1989 மற்றும் 2008இல் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. [1] 10 பிப்ரவரி 2023இல் மூன்றாவது குடமுழுக்கு நடைபெற்றது. [3] [4]

குறிப்புகள்[தொகு]

  1. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்களில் ஒரு கோயில் என்று உஜ்ஜயினி மகாளியம்மன் கோவில் - தஞ்சாவூர், மாலை மலர், 20 செப்டம்பர் 2018 பரணிடப்பட்டது 2020-03-18 at the வந்தவழி இயந்திரம் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில் அல்ல என்பதும், 88 கோயில்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள் பட்டியலில் இக்கோயில் இடம்பெறவில்லை என்பதும் இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ஜ.பாக்கியவதி, பிரார்த்தனைகளை நிறைவேற்றும் உஜ்ஜயினி மாகாளி! தினமணி, வெள்ளிமணி, 6 ஏப்ரல் 2018
  2. 2.0 2.1 2.2 "உஜ்ஜயினி மகாளியம்மன் கோவில் - தஞ்சாவூர், மாலை மலர், 20 செப்டம்பர் 2018". Archived from the original on 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-17.
  3. தஞ்சை கீழவாசல் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது, மாலை மலர், 9 பிப்ரவரி 2023
  4. பக்தர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றும் உஜ்ஜையினி மாகாளியம்மன், மாலை மலர், 10 பிப்ரவரி 2023

வெளி இணைப்புகள்[தொகு]