தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோயில்
ராஜகோபாலசுவாமி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சக்கரத்தாழ்வார் |
தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் வடக்கு வீதி அருகே ராஜகோபாலசுவாமி கோயில் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயிலை மதனகோபாலப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
ராஜகோபாலசுவாமி கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் கருவறை அழகிய கற்றளளியாகவும் நந்தவனங்களும், பிற்காலத்தில் எடுக்கப்பெற்ற மண்டபங்களைக் கொண்டும் ஒரே கோபுர வாயிலோடு காணப்படுகிறது.[2] கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மற்றொரு சிறிய கோபுரம் காணப்படுகிறது. அந்த கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம் உள்ளது. கருவறையில் ராஜகோபாலசுவாமி இல்லை. சக்கரத்தாழ்வார் திருமேனி உள்ளது.
இரு மண்டபங்கள்
[தொகு]இக்கோயில் வளாகத்தின் மேல் திசையில் உள்ள மண்டபத்தில் சிவேந்திரர் கோயில் உள்ளது. வடபுறம் உள்ள மண்டபத்தில் காளியம்மன் கோயில் உள்ளது.
சிவேந்திரர் கோயில்
[தொகு]திருச்சுற்றில் உள்ள சிவேந்திரர் கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 88 கோயில்களில் ஒன்றாகும்.[1] அங்கு மராட்டியர்களின் வழிபாட்டுத்தெய்வமான சிவேந்திரர் உருவங்கள் தேவியருடன் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பத்திற்குப் பின்னரும் மிகப்பெரிய அறுகோணம் உள்ளது.[2]
பகுளாமுகி அம்மன் சன்னதி
[தொகு]திருச்சுற்றில் ராஜகோபுரத்திற்கும் இரண்டாவது கோபுரத்திற்குமிடையே பகுளாமுகி அம்மன் எனப்படும் காளியம்மன் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் பகுளாமுகி அம்மன், கஜலட்சுமி, பைரவர், மார்த்தாண்ட பைரவர், சிவ துர்க்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர் உள்ளனர்.