தஞ்சாவூர் எல்லையம்மன் கோயில்
எல்லையம்மன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | எல்லையம்மன் (ரேணுகாதேவி) |
தஞ்சாவூர் எல்லையம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் எல்லையம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] 1803ஆம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னர் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளார்.[2]
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக எல்லையம்மன் உள்ளார்.
அமைப்பு
[தொகு]ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி உள்ளது. முன்பாக பலி பீடம் உள்ளது. மூலவர் சன்னதியில் எல்லையம்மன் என்கிற ரேணுகாதேவி உள்ளார். சன்னதியின் வலப்புறம் விநாயகர் உள்ளார். முன் மண்டபத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றில் தஞ்சன், மாதங்கி, ஸ்ரீதாரங்கன் சன்னதி உள்ளது. அடுத்து வரிசையாக நாகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து காடாரேவ் மாதா, பூரணை புஷ்கலையுடன் அய்யனார், நாக கன்னிகைகள் உள்ளார். சண்டிகேஸ்வரி சன்னதி, ஞான பைரவர் சன்னதியும் காணப்படுகின்றன.
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலில் 10 ஆகஸ்டு 2000 அன்று குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது.