தஞ்சாவூர் தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில்
தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
தஞ்சாவூர் தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் தெற்கு வீதியில் தெற்கு வீதி-எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
அமைப்பு
[தொகு]இக்கோயிலுக்கு தெற்கு வீதியில் ஒரு வாயிலும், எல்லையம்மன் கோயில் தெருவில் மற்றொரு வாயிலும் அமைந்துள்ளன. தெற்கு வீதி வாயிலாகச் சென்றால் அம்மன் சன்னதியையும், எல்லையம்மன் கோயில் தெரு வாயிலாகச் சென்றால் காசி விசுவநாதர் சன்னதியையும் காணலாம். இக்கோயில் ராஜகோபுரம், மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. திருச்சுற்றில் நால்வர், அருகே நந்தி, பலிபீடத்துடன் கூடிய சித்தி விநாயகர், அரங்குல நாதர், பெரிய நாயகி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளனர். அடுத்து கஜலட்சுமி உள்ளார். அடுத்துள்ள பாலதண்டாயுதபாணியின் முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து பைரவர், சனி, சூரியன, நாகலிங்கம், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தி, துர்க்கையும் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். மூலவர் அறையின் வெளிப்புறத்தில் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். எதிரில் நந்தி, பலிபீடம் காணப்படுகின்றன. மூலவர் சன்னதியின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது.