தஞ்சாவூர் விஜயராமர் கோயில்
தஞ்சாவூர் விஜயராமர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விஜயராமர் |
தஞ்சாவூர் விஜயராமர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் டபீர் விஜயராமசாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. பிரதாபசிம்மர் காலத்தில் அமைச்சராக இருந்தவர் டபீர் பண்டிதர் ஆவார். அவரது பெயரால் இக்கோயில் அழைக்கப்படுவதால் பிரதாபசிம்மர் காலத்தைச் சேர்ந்த கோயிலாகக் கருதலாம்.[2]
அமைப்பு
[தொகு]இக்கோயில் ராஜகோபுரம், பலிபீடம், கொடி மரம், முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. முன்மண்டபத்தில் இடப்புறம் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. கொடி மரத்தையடுத்து கருடாழ்வார் உள்ளார். இக்கோயிலின் வெளிச்சுற்றில் வால்மீகி மண்டபம் உள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக விஜயராமர் சீதை, இலக்குவனார், அனுமார் ஆகியோருடன் உள்ளார். மூலவர் விஜயகோதண்டராமர் என்றழைக்கப்படுகிறார்.
குடமுழுக்கு
[தொகு]21 ஆகஸ்ட் 1987இல் குடமுழுக்கு ஆனதாகக் கல்வெட்டு காணப்படுகிறது.