புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1][2]

வரலாறு[தொகு]

கி.பி.1739-1763இல் இக்கோயில் கட்டப்பட்டது. நேபாள மன்னர் ஒருவரால் தஞ்சாவூர் மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள் கருவறையை அலங்கரிக்கின்றன. கோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.[3]

கோயில் அமைப்பு[தொகு]

ராஜகோபுரம், பலி பீடம், கொடி மரம், திருச்சுற்று, முன்மண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளது. திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, தல மரமான புன்னை மரம், ஜயவீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை உள்ளன.இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.81
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.81
  3. திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, சென்னை, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]