உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்காரு காமாட்சியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:பங்காரு காமாட்சியம்மன்

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. [1]

அமைப்பு

[தொகு]

இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது.

மூலவர்

[தொகு]

இக்கோயிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். கருவறையின் முன்பே இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் காமகோடியம்மன் சன்னதி உள்ளது.

குடமுழுக்கு

[தொகு]

பிரதாமசிம்மன் ஆட்சிக்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. [1] 18 மார்ச் 1992 மற்றும் 3 மார்ச் 2004இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுகின்றன. 23 மார்ச் 2017இல் குடமுழுக்கு நடைபெற்றது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 அருள்மிகு பங்காரு காமாட்சியம்மன் கோயில், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  2. பங்காரு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஜெயேந்திரர், விஜயேந்திரர் பங்கேற்பு, தி இந்து, 24 மார்ச் 2017

வெளி இணைப்புகள்

[தொகு]