தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் நாலுகால் மண்டபத்தில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]
அமைப்பு
[தொகு]கோயிலுக்கு முன்பாக நாலுகால் மண்டபம் உள்ளது. கோயிலின் வெளியே இடப்புறத்தில் சிறிய ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. படிக்கட்டுகளில் ஏறி உயர்ந்த தளத்தில் செல்லும்போது ராஜகோபுரம் உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக கொடிமரம், பலி பீடம் காணப்படுகின்றன. வலப்புறம் ஆஞ்சநேயர் உள்ளார். இடப்புறம் பெருமாள் பாதமும் காணப்படுகிறது. அங்கு விசுவசேனர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, கேசவபெருமாள் களச்சியலட்சுமி சன்னதி, வேணுகோபாலன் சன்னதி, மதனகோபாலன் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மதனகோபாலன் சன்னதிக்கு முன்பாக கருடாழ்வார் உள்ளார். இக்கோயிலின் இடப்புறம் அமைந்துள்ள தேர்முட்டியின் கீழ்ப்பகுதியில் நாலுகால் மண்டப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உள்ளார். மூலவர் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதியின் முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.
கல்வெட்டு
[தொகு]இக்கோயிலில் 8 நவம்பர் 1992 அன்று குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997