தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில்
Appearance
தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சித்தி விநாயகர் |
தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள விநாயகர் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
அமைப்பு
[தொகு]இக்கோயில் சிறிய ராஜகோபுரம், முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்பினைக் கொண்டு விளங்குகிறது. ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் அருகே மூஞ்சுறும், பலிபீடமும் காணப்படுகின்றன. உள் மண்டபத்தில் சுவரின் இரு புறமும் விநாயகர் ஓவியங்கள் காணப்படுகின்றன.
மூலவர்
[தொகு]கருவறையில் மூலவராக சித்தி விநாயகர் உள்ளார்.