தஞ்சாவூர் ரத்னகிரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் ரத்னகிரீஸ்வரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:ரத்னகிரீஸ்வரர்

தஞ்சாவூர் ரத்னகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

இக்கோயில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கி.பி.1826இல் கட்டப்பெற்றதாகும்.[1] ராஜகோபுரம், முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. மூலவர் சன்னதியின் இடப்புறம் அராளகேசி அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கால பைரவர், சூரியன், சனீஸ்வரர் இக்கோயிலில் உள்ளனர்.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக ரத்னகிரீஸ்வரர் உள்ளார். அவர் ரத்னபூரிஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

குடமுழுக்கு[தொகு]

இங்குள்ள கல்வெட்டுகள் மூலமாக 2 ஆகஸ்டு 1993 மற்றும், 7 சூலை 2014 ஆகிய நாள்களில் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றதை அறியமுடிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997