தஞ்சாவூர் கோவிந்தராஜப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்தராஜ பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:கோவிந்தராஜ பெருமாள் (ரெங்கநாதர்)

தஞ்சாவூர் கோவிந்தராஜ பெருமாள் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் நாலு கால் மண்டபம் அருகே அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக ரெங்கநாதர் உள்ளார். இறைவி ரெங்கநாயகி ஆவார்.

அமைப்பு[தொகு]

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கருடாழ்வார் உள்ளனர். மூலவர் சன்னதியில் பெருமாள் கிடந்த நிலையில் உள்ளார். மூலவர் கோவிந்தராஜபெருமாள் என்றும் ரெங்கநாதர் என்றும் என்றழைக்கப்படுகிறார். அனுமார், விநாயகர் உள்ளிட்ட பல தெய்வங்கள் தனியாக ஒரு சன்னதியில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997