தஞ்சாவூர் கோடியம்மன் கோயில்
தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோடியம்மன் |
உற்சவர்: | உற்சவர் பச்சைக்காளி, பவளக்காளி, சூலப்பிடாரி |
தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் (Thanjavur kodiyamman temple) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரத்தில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியை அடுத்து அமைந்துள்ளது.[1]
தேவசுதான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவசுதானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2] [3]
வரலாறு
[தொகு]சோழ மன்னர்கள் நிசும்பசூதனியை வெற்றித்தெய்வமாகப் போற்றியுள்ளனர். விஜயாலயச் சோழன் அவ்வாறான ஒரு நிசும்பசூதனித் திருவுருவை அமைத்து அவளுக்குத் தனிக்கோயில் அமைத்ததாகக் கூறுவர். தாரகாசுரனை வதம் செய்து பராசர முனிவரின் கோரிக்கையை ஏற்று அதே கோலத்தில் நின்றபடி சாந்தாகார உருவமாகக் காட்சி தருகிறாள் கோடியம்மன்.[4]
சன்னதிகள்
[தொகு]மூலவர்
[தொகு]மூலவரான கோடியம்மன் சிவபெருமானை தலையில் சூடியுள்ளார். அம்மனின் வாகனமாக நந்தி அமைக்கப்பட்டுள்ளது.
உற்சவர்
[தொகு]உற்சவராக பச்சைக்காளி, பவளக்காளி, சூலப்பிடாரி என்றழைக்கப்படுவர். பச்சைக்காளி, பவளக்காளித் திருவிழா இக்கோயிலில் சிறப்பான விழாவாகும்.[4]
பிற சன்னதிகள்
[தொகு]மதுரைவீரன், பூரணை பொற்கொடி உடனுறை அய்யனார், சனிபகவான், சூரியன், பைரவர் சன்னதிகள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
தலசிறப்பு
[தொகு]இக்கோயிலில் அம்மனுக்கு பூசை நடக்கும் போது, இக்கோயிலின் அருகிலுள்ள ஆனந்தவல்லி உடனுறை தஞ்சைபுரீசுவரர் கோயிலிலும் பூசை நடத்தப்படுகிறது.
உற்சவ கோடியம்மன் கோயில்
[தொகு]தஞ்சாவூரில் உற்சவ கோடியம்மன் கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் மேலவீதியில் கொங்கனேசுவரர் கோயிலுக்கு சற்று முன்பாக ஓமளிப்பிள்ளையார் கோயில் வளாகத்தினையொட்டி காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Trains to Kodi Amman Temple, Thanjavur on IndiaRailInfo".
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.26
- ↑ J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.26
- ↑ 4.0 4.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, சென்னை, 2014