தஞ்சாவூர் அய்யங்குளம் விசுவநாதர் கோயில்
Appearance
அய்யங்குளம் விசுவநாதர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விசுவநாதர் |
தஞ்சாவூர் அய்யங்குளம் விசுவநாதர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.[1]
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]
அமைப்பு
[தொகு]இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி உள்ளனர். திருச்சுற்றில் நவக்கிரக சன்னதி உள்ளது. அருகே பைரவர், சூரியன், சனீஸ்வரர், அனுமார் உள்ளனர்
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக விசுவநாதர் உள்ளார். மூலவர் அறையின் வெளிப்புறத்தில் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு அருகே தனியாக விசாலாட்சியம்மன் சன்னதி உள்ளது.