திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் திருமங்கலக்குடிக்கு பக்கத்தில் காணப்படும் மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படும். கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில், ஆடுதுறைக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் உள்ளது.

இரு மாந்துறைகள்[தொகு]

மாந்துறை என்ற பெயரில் மற்றொரு ஊர் திருச்சிராப்பள்ளி - லால்குடி பேருந்துத் தடத்தில் உள்ளது. அந்த மாந்துறை வடகரை மாந்துறை எனப்படுகிறது. வடகரை மாந்துறையில் மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில் உள்ளது. இது லால்குடியிலிருந்து மேற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி, லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் இருந்து பேருந்து மூலம் செல்ல வசதி கொண்டுள்ளது.

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்[தொகு]

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். [1]

சப்தஸ்தானப் பல்லக்கு வருகை[தொகு]

சப்தஸ்தான விழாவின்போது திருமங்கலக்குடிக்கு மறுநாள் காலை 7.00 மணிக்கு வருகிறது. அங்கு சிறப்பு வழிபாடுகள் அரதத்தருக்கு நடைபெறும். இறுதியாக பல்லக்குக் கஞ்சனூர் வீதிகளில் வந்து கோயிலில் இறக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி[தொகு]

தென்கரை மாந்துறையில் உள்ள இறைவன் ஆம்ரவனேஸ்வரர், இறைவி போகநாயகி.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002