துலாக்கட்டம் காசிவிசுவநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலாக்கட்டம் காசிவிசுவநாதர் கோயில்
பெயர்
பெயர்:துலாக்கட்டம் காசிவிசுவநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:மயிலாடுதுறை
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:காசி விசுவநாதர்
தாயார்:விசாலாட்சி
சிறப்பு திருவிழாக்கள்:கடைமுழுக்கு தீர்த்தவாரி, முடவன் முழுக்கு, சப்தஸ்தான விழா

காசிவிசுவநாதர் கோயில், தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, துலாக்கட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.

இறைவன், இறைவி[தொகு]

துலாக்கட்டத் தலத்தின் இறைவன் காசி விசுவநாதர். இறைவி விசாலாட்சி. துலாக்கட்டக் காவிரியின் நடுவில் ரிஷபதேவர் எழுந்தருளியுள்ளார்.

கடைமுழுக்கு தீர்த்தவாரி[தொகு]

மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்றின் துலாக்கட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிகச் சிறப்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த கடைமுழுக்குத் திருநாளில் காவிரியில் பிரம்மன் வழிபட்டு படைப்புத் தொழிலை மேற்கொண்டார். திருமால் வழிபட்டு, பிருகு முனிவரின் பத்தினியைக் கொன்ற பாவத்தைப் போக்கிக்கொண்டார். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் கடைமுழுக்கு நடைபெறும். இதையொட்டி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மயூரநாதர் கோவில், வள்ளலார் கோயில், அய்யாறப்பர் கோயில், படித்துறை காசிவிசுவநாதர்கோயில் ஆகிய கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி துலாக்கட்டத்தை வந்தடைவர். இதேபோல பரிமள ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் இருந்து தாயார், பெருமாள் காவிரிக்கரைக்கு வந்துசேர்வர். அந்தச் சமயத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அப்போது காவிரியில் பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

முடவன் முழுக்கு[தொகு]

கடைமுக தீர்த்தவாரி ஐப்பசி மாதம் கடைசி நாளில் புனித நீராட இயலாதவர்கள், கார்த்திகை முதல் தேதியில் நடைபெறும் முடவன் முழுக்கில் புனித நீராடுவது வழக்கம். இதற்கான விழா மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில் மற்றும் பரிமளரெங்கநாதர் கோயில்களில் 10 நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்[தொகு]

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பங்கேற்கும் பிற கோயில்கள்:

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

தினகரன் பரணிடப்பட்டது 2013-11-19 at the வந்தவழி இயந்திரம்