மாளிகைத்திடல் சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாளிகைத்திடல் சுந்தரேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். [1]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம்-திருக்கருக்காவூர் சாலையில் 8 கிமீ தொலைவில் வெண்ணாற்றின் வட கரையின் இடது புறத்தில் உள்ள மாளிகைத்திடல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார். [1]

சப்தஸ்தானம்[தொகு]

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[2]

தற்போதைய நிலை[தொகு]

300 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது. [1]


மேற்கோள்கள்[தொகு]