சூலமங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூலமங்கை கிருத்திவாகேசுவரர் கோயில்
பெயர்
பெயர்:சூலமங்கை கிருத்திவாகேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:அய்யம்பேட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கிருத்திவாகேசுவரர்
தாயார்:அலங்காரவல்லி

சூலமங்கை என்பது சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன மூன்றாவது தலம் ஆகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுபதிகோயில் தொடருந்து நிலையத்திற்குத் தெற்கே 100 மீ தொலைவில் உள்ளது. இசை உலக வரைபடத்தில் இடம்பெற்ற ஊர். பாகவதமேளா நாட்டிய நாடகம் நடைபெற்ற ஊர். சிற்பக்கலையின் சிறப்பிற்கு உச்சமாக இவ்வூரில் இருக்கும் சூலதேவர் சிற்பம் காணப்படுகிறது. முதல் தலத்து இறைவனும் இறைவியும் அனவித்யசர்மாவுடன் இவ்வூர் நெருங்கும்போது அந்திப்பொழுதாகிவிடுகிறது. இத்தலத்திற்கும் பல்லக்கு இல்லை. எனவே படிச்சட்டத்தில் எழுந்தருளி எதிர்கொண்டு அழைத்துவருகிறார்கள்.[1]

இறைவன், இறைவி[தொகு]

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர், கரிஉரித்த நாயனார்.இறைவி அலங்காரவல்லி.

கல்வெட்டு[தொகு]

சோழர் கால கற்றளியில் மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், போசள வீரராமனாதன் கல்வெட்டுகள் நிவந்தங்கள் பற்றிய செய்திகளையும், சமூக பொருளாதார வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலமங்கை&oldid=2254341" இருந்து மீள்விக்கப்பட்டது