பசுமங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பசுமங்கை பசுபதீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:பசுமங்கை பசுபதீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:அய்யம்பேட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பசுபதீஸ்வரர்
தாயார்:பால்வளநாயகி

தல வரலாறு[தொகு]

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன ஐந்தாவது தலம் பசுமங்கை ஆகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14 கிமீ தொலைவில் கள்ளர் பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம் அங்கிருந்து தெற்கில் 1/2 கிமீ தொலைவில் உள்ளது. கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்று. சோழர் காலத்துக் கோயில் பிற்காலத்தில் காவிரி வெள்ளத்தாலும், மாலிக்காபூர் ஆற்காடு நவாப் போன்றவர்கள் படையெடுப்பின் போதும் பேரழிவைச் சந்தித்திருக்கிறது. கடைசியாக தஞ்சை மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஏழூர் கோயில்களுள் இக்கோயிலில் மட்டுமே மிகப்பெரிய ஏழடுக்கு ராஜகோபுரம் உள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீபசுபதீஸ்வரர். இறைவி ஸ்ரீபால்வளநாயகி, ஸ்ரீலோகநாயகி.

கல்வெட்டு[தொகு]

சோழர் கால எழுத்தமைதியிலான துண்டு கல்வெட்டுகளும், கட்டுமானங்களும் ஜேஷ்டாதேவி சிற்பமும் சோழர் காலம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இங்குள்ள உச்சிஷ்ட கணபதி ஓர் அரிய சிற்பக்கலைப்படைப்பாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமங்கை&oldid=2254542" இருந்து மீள்விக்கப்பட்டது