திருச்சக்கராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்கராப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில்
பெயர்
பெயர்: சக்கராப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்: அய்யம்பேட்டை
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: சக்கரவாகேசுவரர்
தாயார்: தேவநாயகி

தல வரலாறு[தொகு]

திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் திருச்சக்கராப்பள்ளி முதல் தலமாகும். தேவாரப்பதிகம் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் 121ஆவது தலம். ஞானசம்பந்தர் பதிகம் பெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள ஊர். ஞானசம்பந்தர் காலத்தில் வணிகப்பெருவழியில் அமைந்த பெரும் வணிக நகரம் செம்பியன்மாதேவி காலத்தில் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டது. செம்பியன்மாதேவி இவ்வூர் இறைவனை மலர்கொண்டு வழிபடும் புடைப்புச்சிற்பம் இதனை உறுதிப்படுத்தும். [1]

இறைவன், இறைவி[தொகு]

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீசக்கரவாகேசுவரர், திருச்சக்கராப்பள்ளி உடைய மகாதேவர். இறைவி ஸ்ரீதேவநாயகி

கல்வெட்டு[தொகு]

முதலாம் இராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர் நித்தவிநோத வளநாட்டு கிழார் கூற்றத்து அகழிமங்கலத்து பிரம்மதேயம் திருசக்கராப்பள்ளி என கல்வெட்டுகளில் காணப்படுகிறது. [1]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சக்கராப்பள்ளி&oldid=2254413" இருந்து மீள்விக்கப்பட்டது