தலைஞாயிறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலைஞாயிறு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 11 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

தலைஞாயிறு (ஆங்கிலம்:Thalainayar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும்.

தலைஞாயிறு பேரூராட்சியிலிருந்து வங்காள விரிகுடா 7 கிமீ தொலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு 1100.00 மி.மீ ஆக உள்ளது. நெல் விளைவித்தல் முக்கியத் தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 84.15 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர். [3]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. Thalainayar Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைஞாயிறு&oldid=2599486" இருந்து மீள்விக்கப்பட்டது