மணல்மேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மணல்மேடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,254 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

மணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9254 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மணல்மேடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணல்மேடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மணல்மேட்டிற்கு நகனதபுரம் என்ற புராதன பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர்கள்,முதலியார்,நாயுடு,விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.

மணல்மேட்டில் இயங்கி வந்த நூர்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

வல்லம்
பாப்பாக்குடி
பெரிய இலுப்பபட்டு
சின்ன இலுப்பபட்டு
இலுப்பபட்டு
ராஜசூரியன்பேட்டை
வையாபுரிதிடல்
மணல்மேடு
அகரமணல்மேடு
ராதாநல்லூர்
விருதங்கநல்லூர்

ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

மேதைகள்[தொகு]

மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமுர்த்தி பிறந்தார்.
மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார்.

ஆலயங்கள்[தொகு]

  • திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
  • இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)
உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர்
மங்கையொர் கூறுடையான் வானோர் முதலாய பிரான்
அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய
பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே

என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30வது தலம்.

  • மாரியம்மன் கோயில்
மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் வைத்தீசுவரன்கோயிலில் இருந்து பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்மேடு&oldid=2208610" இருந்து மீள்விக்கப்பட்டது