உள்ளடக்கத்துக்குச் செல்

நாகூர் (தமிழ் நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகூர்
Nagore
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்97,525
 • அடர்த்தி12,000/km2 (32,000/sq mi)
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அகுஎ
611002
தொலைபேசி குறியீடு04365
வாகனப் பதிவுTN51
முத்துப்பேட்டையிலிருந்து தொலைவு71 கி.மீ (45 மைல்)
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்

நாகூர் (Nagore) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். காரைக்காலுக்கு தெற்கே சுமார் 12 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் நாகூர் அமைந்துள்ளது. காரைக்கால், திருவாரூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகியன அருகிலுள்ள நகரங்கள் ஆகும். நாகூரில் சுமார் 39,000 மக்கள் வசிக்கின்றனர். நாகூர் தர்கா நகரத்தின் ஒரு முக்கிய ஈர்ப்பாகும். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசுலாமிய ஆலயமான நாகூர் தர்கா, சாதி, மதம் அல்லது இன வேறுபாடின்றி மில்லியன் கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது.[1][2] இந்தியாவிலேயே இசுலாமிய மக்களின் மிகப்பெரிய புனித தலமாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினத்தந்தி (2024-12-03). "நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2025-02-09.
  2. abhisudha. "இங்க எல்லாரும் ஒண்ணுதான்: நாகூர் தர்காவில் நாதஸ்வர இசை". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2025-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகூர்_(தமிழ்_நாடு)&oldid=4205936" இலிருந்து மீள்விக்கப்பட்டது