தேவகோட்டை
தேவகோட்டை | |
— முதல் நிலை நகராட்சி — | |
அமைவிடம் | 9°57′N 78°49′E / 9.95°N 78.82°Eஆள்கூற்று: 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | G. லதா இ. ஆ. ப. [3] |
நகராட்சித் தலைவர் | கே.ஆர்.சுமத்ரா |
மக்கள் தொகை | 51.865 (2011[update]) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு • உயரம் |
• 52 மீற்றர்கள்[convert: unknown unit] |
குறியீடுகள்
|
தேவகோட்டை (ஆங்கிலம்:Devakottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊர் நாட்டுக்கோட்டை நகராத்தார்களின் முக்கிய வாழ்விடமாகும்.
பொருளடக்கம்
அமைவிடம்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ளது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது.
போக்குவரத்து[தொகு]
திருச்சிராப்பள்ளி – இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், திருச்சியிலிருந்து இராமேசுவரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை விமான நிலையமாகும். அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவகோட்டை ரோடு ரயில் நிலையமாகும். தேவகோட்டையில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவக்கோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும்.
பெயர்க் காரணம்[தொகு]
தேவகோட்டை-தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டது பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தேவகோட்டை என்றானது என்றும் கூறுவர்.
சிறப்புகள்[தொகு]
மகாத்மா காந்தி அவர்கள் தேவகோட்டைக்கு 1934ஆம் ஆண்டு, தலித் இனத்தைச் சேர்ந்த பூச்சி என்பவர் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் இறந்தமைக்கு வருந்தம் தெரிவிப்பதற்காக வந்தார், அப்போது தலித் மற்றும் நாட்டார் இனத்தைச் சேர்ந்த மக்களிடம், தலித்துகள் மேலாடை அணிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் வந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அவர் தங்கியிருந்த சரஸ்வதி வாசக சாலையில் ஜனவரி 2009ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர்.
பள்ளிகள்[தொகு]
தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்
- என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி
- டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி
- வைரம் குரூப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
- ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளி
- ஜமீந்தார் தெரு உயர்நிலைப் பள்ளி
- ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
- புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
- முருகானந்தா நடுநிலைப் பள்ளி
கல்லூரிகள்[தொகு]
- ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சாந்தி நீகேசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- அமராவதி புதூர்
- ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி புதூர்
- புனித பவுல் கல்வியல் கல்லூரி
- புனித சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி
மசூதிகள்[தொகு]
தேவகோட்டையில் மசூதிகள் அமைந்துள்ள இடங்கள்
- வட்டாணம் ரோடு
- மொகமதியார் பட்டணம்
- காந்தி ரோடு
- ராம்நகர்
- பேருந்து நிலையம்
தேவாலயங்கள்[தொகு]
தேவகோட்டையில் தேவலாயங்கள் அமைந்துள்ள இடங்கள்
- ராம்நகர்
- திருப்பத்தூர் ரோடு
- சரஸ்வதி வாசக சாலை
கோவில்கள்[தொகு]
தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள்
- நகரச் சிவன் கோவில்
- சிலம்பனி பிள்ளையார் கோவில்
- வெள்ளையன் ஊருணி பிள்ளையார் கோவில்
- கருதா ஊருணி பிள்ளையார் கோவில்
- செல்லப்பச் செட்டியார் கோவில்
- ரங்கநாத பெருமால் கோவில்
- டி.ஊருணி பிள்ளையார் கோவில்
- கோட்டையம்மன் கோவில்
- இரவுசேரி சிவன் கோவில்
- அண்ணாசாலை காமாட்சி அம்மன் கோவில்
- அருணகிரிபட்டிணம் முத்துமாரியம்மன் கோயில்
- விவேகானந்தபுரம் ஓட்டு பிள்ளையார் கோயில். *நகை கடை பஜார் முத்துமாரி அம்மன் கோவில்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Devakottai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.