வசந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்த்
பிறப்புசோம. சின்ன வீரப்பன்
14 திசம்பர் 1965
தேவகோட்டை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்வசந்த் எஸ் சாய்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது
வாழ்க்கைத்
துணை
ரேனுகா
உறவினர்கள்ஜீவா (மைத்துனர்) சோம வள்ளியப்பன் (அண்ணன்)

வசந்த் (Vasanth) பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டில் உள்ள தேவகோட்டையில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி கல்வியை தேவகோட்டை சிறீநிவாசா நடுநிலைப் பள்ளியிலும் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூரிலும் பயின்றார்[1][2]. இவருடைய முதற்படமான கேளடி கண்மணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் 285 நாள் ஓடிச் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.[2]

வாழ்க்கை[தொகு]

வசந்த் சிறுகதை எழுதியும் பத்திரிக்கையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[3]. பிறகு கே.பாலசந்திரடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உட்பட 18 படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பின் தன்னந்தனியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு 285 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடிப்பில் வெளிவந்த கேளடி கண்மணி திரைப்படத்தை 1990 இல் இயக்கினார். இவரது அடுத்த படம் முந்தைய படத்தில் இடம்பெற்ற பாடலின் தலைப்பை தாங்கி வந்த நீ பாதி நான் பாதி திரைப்படம் மணமாகாத தாய்மார்களைப் பற்றி பேசியது. இந்த படத்தில் வரும் 'நிவேதா' என்ற ஒற்றை வார்த்தையில் உருவாக்கப் பட்டிருக்கும் பாடல் படமாக்கபட்டிருக்கும் விதம் பரவலாக பேசப் பட்டது. இவரது மூன்றாவது படைப்பு த்ரில்லர் வகையை சார்ந்த ஆசை 1995 ஆம் ஆண்டு வெளியாகி 200 நாட்கள் ஒடி வணீக ரீதியாக புது பாதையை உருவாக்கியது[4]. மணி ரத்னம் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் அஜித் குமாருக்கு வணிக ரீதியாலான மாற்றத்தை மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் வழிவகுத்தது[5][6]. தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் ஒன்றான சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருது சுவலட்சுமிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது வசந்துக்கும் வழங்கப்பட்டது.

1997இல் அடுத்த திரைப்படமான நேருக்கு நேர் படத்தையும் மணி ரத்னமே தயாரித்தார். இத்திரைப்படத்தில் அப்பொழுது முன்னணியில் இருந்த விஜய்க்கு இணையான கதாநாயகனாக நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவை அறிமுகம் செய்து சிம்ரனை கதாநாயகியாக்கினார். தொடர்ச்சியாக வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப் பார் (1999) திரைப்படத்தில் பின்னாளில் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவை முதன்முதலில் ஜோடியாக்கினார். இந்த திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வுக்கும் மிகப்பெரிய இசை வெற்றியை தந்தது. அடுத்த ஆண்டு அப்பு, ரிதம் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கினார். அப்பு திரைப்படத்தில் திருநங்கையாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஒரே விபத்தில் தங்கள் துணை இழந்த இருவர் அந்த துக்கத்தில் இருந்து வெளியேறி புது உறவை ஏற்பது ரிதம் படமாகும். இந்த திரைப்படத்தில் ஐவகை நிலங்களை அடிப்படியாக கொண்ட பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். [7] ரிதம் படமே தன் இதயத்துக்கு நெருக்கமான படம் என்று வசந்த் தெரிவித்துள்ளார். அடுத்த திரைப்படமான ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே (2002) வில் ஐந்து பாடல்களுக்கு ஐந்து புதுமுக இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்து இந்திய சினிமாவில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார். [7][8][9]. 2007ல் இயக்கிய த்ரில்லர் படமான சத்தம் போடாதே படம் விமர்சன ரீதியாக பாராட்டபட்டு அதிக வசூலை பெற்று, தமிழ் மாநில திரைப்பட விருதான சிறந்த திரைக்கதாசிரியர் விருதையும் பெற்றார். [10]. மூன்று காதலை மையமாக கொண்ட மூன்று பேர் மூன்று காதல் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. [11]. 2015 ம் ஆண்டு தொடங்கிய பெண்களுக்கு ஆதரவாக சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்திற்கு பிரபல கர்னாடக இசை பாடகி சுதா ரகுநாதனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். [12]

வசந்த் திரைப்படங்களுக்கிடையே நிறைய விளம்பர படங்கள், குறும் படங்கள் மற்றும் ஆவண படங்களையும் இயக்கியுள்ளார். [2][13] சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான சா.கந்தசாமி [2] எழுதிய விசாரணை ஆணையத்தை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் குறும்படம் சிறந்த கற்பனை குறும்படத்திற்கான தேசிய விருதினை 2005ம் [14] ஆண்டு பெற்றது இவரது கலைப் பணியில் கவனிக்கபட வேண்டியது. 40க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காக விஜய் டிவிக்காக மணி ரத்னத்துடன் சேர்ந்து இயக்கியுள்ளார். இதற்கிடையில் மாணவர்களுக்காக திரைப்பட தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பட்டறைகளையும் வசந்த் நடத்திவருகிறார். [1][2] .

திரைப்பட விபரம்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது குறிப்புகள்
இயக்குநர் ஆசிரியர் நடிகர்
1990 கேளடி கண்மணி Green tickY Green tickY
1991 நீ பாதி நான் பாதி Green tickY Green tickY
1995 ஆசை Green tickY Green tickY
1997 நேருக்கு நேர் Green tickY Green tickY
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் Green tickY Green tickY
2000 அப்பு Green tickY Green tickY
2000 ரிதம் Green tickY Green tickY
2003 ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே Green tickY Green tickY
2007 சத்தம் போடாதே Green tickY Green tickY
2013 மூன்று பேர் மூன்று காதல் Green tickY Green tickY
2016 தண்ணீர் Green tickY Green tickY படப்பிடிப்பில்
2018 (2021) சிவரஞ்சனியும் சில பெண்களும் Green tickY Green tickY

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2014 நினைத்தது யாரோ
2015 வை ராஜா வை கார்த்தியின் தந்தை

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Vasanth dons the teacher's hat!". The Times of India. 6 April 2010. Archived from the original on 16 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Metro Plus Chennai / Columns : A fine balance". The Hindu. 21 September 2010. Archived from the original on 10 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  3. "Just Above The Pond – A Short Film By S M A Vasant: Events in Hyderabad". Fullhyderabad.com. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  4. "Rediff on the Net, Movies:Ajith.. the south hero signed for ABCL's film". Rediff.com. 4 April 1997. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  5. "Realistic film-making". The Hindu. 1 December 2001. Archived from the original on 10 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  6. "Rediff on the NeT, Movies: An interview with Ajith Kumar". Rediff.com. 6 July 1999. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  7. 7.0 7.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
  8. "Satham Podathey is a good thriller". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  9. "Satham Podathey Review – Tamil Movie Review by Sharada Balasubramanian". Nowrunning.com. 21 September 2007. Archived from the original on 13 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  10. cinesouth (30 September 2009). "Dailynews – Rajini & Kamal nominated for best actor". Cinesouth.com. Archived from the original on 7 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. V Lakshmi, TNN 2 August 2011, 11.41am IST (2 August 2011). "'MPMK' is not a love story". The Times of India. Archived from the original on 6 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  12. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Padmapriya-in-Vasanths-pro-women-film/articleshow/45869316.cms
  13. "Metro Plus Coimbatore / Cinema : Vasanth in a new role". The Hindu. 14 March 2005. Archived from the original on 10 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  14. cinesouth. "Dailynews – National award for director Vasanth". Cinesouth.com. Archived from the original on 7 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்&oldid=3619310" இலிருந்து மீள்விக்கப்பட்டது