உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தம் போடாதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தம் போடாதே
திரைப்பட பதாகை
இயக்கம்வசந்த்
தயாரிப்புசி. சங்கர்
ஆர். எஸ். செந்தில் குமார்
கதைவசந்த்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபிரித்விராஜ்
பத்மபிரியா
நிதின் சத்யா
ராகவ்
நாசர்
சுகாசினி
ஒளிப்பதிவுதினேஷ் குமார்
படத்தொகுப்புசதிuஷ்
வெளியீடுசெப்டம்பர் 14, 2007 (2007-09-14)
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சத்தம் போடாதே என்பது 2007ஆவது ஆண்டில் தமிழில் வெளியான திகில் திரைப்படமாகும். சங்கர், செந்தில்நாதன் ஆகியோர் தயாரித்த இத்திரைப்படத்தை வசந்த் எழுதி இயக்கியிருந்தார். பிரித்விராஜ், பத்மபிரியா, நிதின் சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நாசர், பிரேம்ஜி அமரன், சுகாசினி ஆகியோர் இதர துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இப்படமானது, நேர்மையான விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 14 செப்டம்பர் 2007 அன்று வெளியானது. இத்திரைப்படம் தமிழில் வெளியான நாளன்றே மலையாளத்தில் கேகாத சப்தம் என்ற பெயரில் வெளியானது.

கதைச் சுருக்கம்

[தொகு]

ரத்னவேல் காளிதாஸ் அதிகமான மது அருந்துவதால் ஆண்மைக்குறைவு பிரச்சினையை எதிர்கொள்கிறார். இந்த உண்மையை மறைத்துக்கொண்டு அவர் பாணுவை மணமுடித்துக்கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு உண்மை நிலவரம் வெளிப்படும்போது, அவர்களின் தாம்பத்ய உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டு இறுதியில் விவாகரத்தில் முடிவடைகிறது.

பாணுவின் கடந்தகால வாழ்க்கை பற்றி அறிந்தும், ரவிச்சந்திரன் அவரை காதலித்து மணந்துகொள்கிறார். ரவிச்சந்திரனுடன் பாணுவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறது. ஆனால் திடீரென்று ரத்னவேல் காளிதாஸ் மீண்டும் பாணுவின் வாழ்க்கையில் தோன்றுகிறார். இதனால் பாணுவின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் மிரட்டல் நிறைந்த முடிவுப் பகுதியாகும்.

நடிகர்கள்

[தொகு]

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "மதுப் பழக்கத்தின் விபரீத விளைவுகளை வைத்து, சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் வஸந்த். சைக்கோபாத் கதையை வக்கிரம் கலக்காமல் நயமாகக் கையாண்ட விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப்!" என்று எழுதி 41/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://tamil.filmibeat.com/reviews/satham-podathey-review-070918.html
  2. "சினிமா விமர்சனம்: சத்தம் போடாதே". விகடன். 2007-09-26. Retrieved 2025-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தம்_போடாதே&oldid=4278742" இலிருந்து மீள்விக்கப்பட்டது