கண்டனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்டனூர்
கண்டனூர்
இருப்பிடம்: கண்டனூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°06′18″N 78°49′30″E / 10.105°N 78.825°E / 10.105; 78.825ஆள்கூறுகள்: 10°06′18″N 78°49′30″E / 10.105°N 78.825°E / 10.105; 78.825
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் காரைக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

7,696 (2011)

1,503/km2 (3,893/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.12 சதுர kiloமீட்டர்கள் (1.98 sq mi)

கண்டனூர் (ஆங்கிலம்:Kandanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் கண்டனூர் என இரண்டு உட்கிராமங்கள் கொண்டது.

காரைக்குடி - அறந்தாங்கி செல்லும் பாதையில், சிவகங்கையிலிருந்து 63 கிமீ தொலைவில் கண்டனூர் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 9 கீமீ தொலைவில் உள்ள காரைக்குடி ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,959 வீடுகளும், 7,696 மக்கள்தொகையும் கொண்டது. [4] இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

வரலாறு[தொகு]

சிவகங்கை சீமையின் பாலைய நாடான கண்டனூர், புதுவயல், கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய ஐந்து கிராமப் பஞ்சாயத்துகளின் தலைமையிடமாக கண்டனூர் அமைந்திருந்தது. கண்டனூர் ஊராட்சியாக இருந்த காலத்தில், 1905ஆம் ஆண்டு முதல் 1908 ஆம் ஆண்டு வரை நகரத்தார் திரு.வ.யி.ராம.ப. பெரியணன் செட்டியார் அவர்கள் சேர்மனாக சேவை செய்து வந்தார். பின்னர் தமிழக அரசு ஆணை எண்.1287, நாள்.15.03.1929ல் காணும் உத்தரவுபடி கண்டனூர் முதல்நிலை பேரூராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kandanur Population Census 2011
  5. "பேரூராட்சியின் இணையதளம்". 2019-03-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டனூர்&oldid=3407180" இருந்து மீள்விக்கப்பட்டது