நாட்டரசன் கோட்டை
நாட்டரசன் கோட்டை | |
அமைவிடம் | 9°52′N 78°34′E / 9.87°N 78.57°Eஆள்கூறுகள்: 9°52′N 78°34′E / 9.87°N 78.57°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
வட்டம் | காளையார்கோயில் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ப. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
5,860 (2011[update]) • 326/km2 (844/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
18 சதுர கிலோமீட்டர்கள் (6.9 sq mi) • 75 மீட்டர்கள் (246 ft) |
நாட்டரசன் கோட்டை (ஆங்கிலம்:Nattarasankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கைக்கு கிழக்கே 8 கிமீ தொலைவில், காளையார்கோவிலுக்கு அருகில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,554 வீடுகளும், 5,860 மக்கள்தொகையும் கொண்டது. [4]
இது 18 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 9°52′N 78°34′E / 9.87°N 78.57°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.
சிறப்புகள்[தொகு]
இங்கு கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இப்பேரூராட்சியில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தின் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முக்கியமாக 8ஆம் திருவிழா வெள்ளிரதம், இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.
கம்பன் கல்லறை[தொகு]
சோழநாட்டில் பிறந்த கம்பன் மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ என சோழ மன்னனைப் பழித்துப் பாடிவிட்டு, செட்டி நாட்டுப் பகுதிக்கு தனது இறுதிக் காலத்தைக் கழித்த பின் நாட்டரசன் கோட்டையில் மாண்டான் என்று கருதப்படுகிறது. அவரது கல்லறை இங்கு அமைந்திருக்கிறது. [7] கம்பன் தான் இயற்றிய இராம காதையை அரங்கேற்றிய பங்குனி மாதம் அத்த நாளில் இக்கல்லறைக் கோயில் வளாகத்தில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் நிறைவு விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nattarasankottai Population Census 2011
- ↑ நாட்டரசன்கோட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Nattarasankottai". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/08/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/article1739553.ece