உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லங்கோடு நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லங்கோடு
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நகராட்சி தலைவர் திருமதி. ராணி
மக்கள் தொகை

அடர்த்தி

40,136 (2011)

3,175/km2 (8,223/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.64 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kollemcode

கொல்லங்கோடு (Kollankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது 16 அக்டோபர் 2021 அன்று பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டது . இந்த நகராட்சியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தூக்கத் திருவிழா கொண்டாடப்படுகிறது. [3]

கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [4][5]

அமைவிடம்

[தொகு]

கொல்லங்கோடு நகராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கிமீ தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கிமீ; வடக்கில் பாறசாலை 9 கிமீ; தெற்கில் மேடவிளாகம் 0.50 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பாறசாலையில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

[தொகு]

12.64 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

நகராட்சியின் அலுவலர்கள்

[தொகு]
பொறுப்பு பெயர்
நகராட்சி ஆணையர் திருமதி. ராமதிலகம்
நகராட்சி தலைவர் திருமதி. ராணி
நகராட்சி துணைத்தலைவர் திருமதி. பேபி


மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 மக்கள்தொகையும் கொண்டது. [7][8]

இதனையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  4. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
  5. kumbakonam corporaon and 19 muniicipalites
  6. கொல்லங்கோடு பேரூராட்சியின் இணையதளம்
  7. கொல்லங்கோடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  8. https://www.citypopulation.de/php/india-tamilnadu.php?adm2id=3328

வெளி இணைப்புகள்

[தொகு]


[1][2]


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லங்கோடு_நகராட்சி&oldid=4023286" இலிருந்து மீள்விக்கப்பட்டது