விக்கிரமசிங்கபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கிரமசிங்கபுரம்
விக்கிரமசிங்கபுரம்
இருப்பிடம்: விக்கிரமசிங்கபுரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°40′N 77°20′E / 8.67°N 77.33°E / 8.67; 77.33ஆள்கூறுகள்: 8°40′N 77°20′E / 8.67°N 77.33°E / 8.67; 77.33
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் மனோன்மணி
மக்கள் தொகை 48,101 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


200 மீட்டர்கள் (660 ft)

விக்கிரமசிங்கபுரம் அல்லது வி. கே. புரம் (ஆங்கிலம்:Vikramasingapuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.[3] இந்த ஊர் சிங்கை, பாவநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இது அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைத்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இந்த இடம் "பொதிகை மலை" என்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் உள்ளது. மேலும் இது தாமிராபராணி ஆற்றின் கரையில் உள்ள அகஸ்தியார் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°40′N 77°20′E / 8.67°N 77.33°E / 8.67; 77.33 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 200 மீட்டர் (656 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,101 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். விக்கிரமசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரமசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தொழில்[தொகு]

இந்த நகரம் பச்சை நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது. 1940க்கு முன்னர் இந்த பகுதியில் விவசாயமே முதன்மை வணிகமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெரும்பான்மையான மக்கள் மதுரா கோட்ஸில் பணிபுரிந்தனர், இது பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பஞ்சாலை ஆகும்.

கோயில்கள்[தொகு]

 1. பாபநாசநாதர் கோயில் - தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்களாநாதர், உலகம்மையுடன் உள்ள சிவாலயம். இது நவ கைலாயங்கள் என அழைக்கப் பெறும் ஒன்பது நவக்கிரகங்களுக்கான சிவன் கோயில்களில் முதலாவது கோயிலாகும். இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத பாவங்கள் கூட தீர்ந்து விடும் என்பார்கள். இதனால் இந்த ஊரைப் பாவநாசம் என்றும் அழைப்பதுண்டு.
 2. சிவந்தியப்பர் கோயில்.
 3. வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்.
 4. உழக்கரிசி விநாயகர் ஆலயம்.

பள்ளிகள்[தொகு]

 1. பாபநாசம் தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப்பள்ளி
 2. புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி
 3. திரு இருதய உயர்நிலைப்பள்ளி
 4. அமலி மகளிர் மேனிலைப்பள்ளி

கல்லூரிகள்[தொகு]

 1. திருவள்ளுவர் கல்லூரி

சிறப்புகள்[தொகு]

 1. சிங்கைப் பிரபந்தத் திரட்டு எழுதிய நமச்சிவாயக் கவிராயர் வாழ்ந்த ஊர் இது.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. "Vikramasingapuram". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
 5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜனவரி 30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |accessyear= ignored (உதவி); Invalid |dead-url=live (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரமசிங்கபுரம்&oldid=3413104" இருந்து மீள்விக்கப்பட்டது