உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்வாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்வாணன்
பிறப்புஇராமநாதன்
22.05.1926
தேவகோட்டை சிவகங்கை மாவட்டம்
இறப்பு10.11.1977
சென்னை
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், இதழாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சங்கர்லால் துப்பறியும் புதினங்கள்
சமயம்இந்து
பெற்றோர்லெட்சுமணன் செட்டியார் - பிச்சம்மை ஆச்சி
பிள்ளைகள்லேனா தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன்

தமிழ்வாணன் (மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தமிழ்வாணன் தமிழ்நாட்டின் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார்.[1].

பத்திரிகைத் துறையில்[தொகு]

வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் "கிராம ஊழியன்" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை. கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "துணிவே துணை" என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார்[1].

தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!". அதனை அடுத்து சவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதினார்[1]. இவருடைய ஒரு பக்க கட்டுரைகள் இன்றும் பிரபலமானவை.

கல்கண்டு வார இதழ்[தொகு]

குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள்.

படைப்புகள்[தொகு]

நெடுங்கதைகள்[2][தொகு]

 1. அஸ்ஸாம் எல்லையில்
 2. ஆயிரம் கண்கள்
 3. இமயத்தின் உச்சியில்
 4. இரகசியம்
 5. இரண்டாவது நிலா
 6. இரண்டு பேர்
 7. இரவு மணி இரண்டு
 8. இருண்ட வீடு
 9. இரும்புக்கை மனிதன்
 10. இருள்
 11. இருளில் வந்த இருவர்
 12. இன்பவல்லி இதுவா உன் முடிவு?
 13. இன்றோ? நாளையோ?
 14. இன்னுமா உயிரோடு இருக்கிறாய்?
 15. உயிர்வாழ்வது உன்னாலே
 16. உயிலும் உயிரும் (1967-68இல் கல்கண்டில் வெளிவந்த தொடர்
 17. உன் மனம் காயோ? பழமோ?
 18. எங்கிருந்தோ கேட்ட குரல்
 19. எல்லாம் தவறு!
 20. என்னுடன் பறந்து வா
 21. என்னைத்தேட வேண்டாம்
 22. என்னைத் தொடாதே!
 23. ஏழரைமணி எக்ஸ்பிரஸ்
 24. ஒரு கழுகு ஒரு புறா
 25. ஒரு கழுகு காத்திருக்கிறது
 26. ஒரு குரல்
 27. ஒற்றைக்கண் மனிதன்
 28. கடலில் கண்டெடுத்த புதையல்
 29. கடலில் தெரிந்த கை
 30. கடலில் மர்மம்
 31. கடைசி வரை காத்திரு
 32. கண்ணம்மா
 33. கண்ணில் கலந்த கண்ணே!
 34. கதவு திறந்தது! கை தெரிந்தது!!
 35. கம்ப்யூட்டர் கொலை
 36. கருகிய கடிதம்
 37. கருநாகம்
 38. கவிழ்ந்த கப்பல்
 39. கள்ளனைத் திருத்திய கன்னி
 40. கன்னி நீ ஒரு கனி
 41. காணக் கிடைக்காத பணம்
 42. காபரே கேர்ள்
 43. காலடி ஓசை
 44. கால்கள் தெரிந்தன!
 45. கான்ஸ்டபிள் கண்ணம்மா
 46. கிழக்கே உதித்த காதல்
 47. கைதி நம்பர் 811
 48. கொல்லும் நேரம்
 49. சிம்லாவில் கண்ட அழகி
 50. சிரிப்பொலி கேட்டது
 51. சிறைக்கு வெளியே
 52. சீன ஒற்றர்கள்
 53. சுவரில் தெரிந்த நிழல்
 54. ஞாபகசக்தி இல்லையா?
 55. ஞானக்கிறுக்கு
 56. ஞானயோகம்
 57. பணத் தொல்லைகளைப் போக்கப் பல வழிகள்
 58. பதினான்காவது மாடி
 59. பம்பாய்ப் பைத்தியம்
 60. பயங்கர நகரம்
 61. பாலைவனத்தில் பத்து நாட்கள்
 62. பின்னிரவு
 63. புயல்
 64. புயல்வீசிய இரவில்
 65. புரூச்
 66. பெண்கள் தேடிய புதையல்
 67. பெண்ணை நம்பாதே
 68. பெயர் இல்லாத தெரு
 69. பேய்
 70. பேய் பேய்தான் (1967இல் கல்கண்டில் வெளிவந்த தொடர்)
 71. மஞ்சள் தலையணை
 72. மர்மத்தீவு
 73. மர்ம மனிதன்
 74. மலையில் மறைந்த மனிதன்
 75. மணிமொழி நீ என்னை மறந்துவிடு
 76. மருதமலைச்சாரலிலே
 77. மலர்க்கொடி உன்னை மறப்பது எப்படி?
 78. மழைக்குப்பின்
 79. மனிதர்கள் இல்லாத தீவு
 80. மனைவி
 81. மாயக்கள்ளன்
 82. மீனழகி
 83. மூடிக்கிடக்குதே உன் நெஞ்சம்
 84. மூவரை விழுங்கிய முதலை
 85. துப்பாக்கிமுனை
 86. தொலைபேசியில் பேசியது யார்?
 87. நடிகையின் உயில்
 88. நடுவிரல்
 89. நண்டு
 90. நம் காரியத்தை நாம் சாதித்துக்கொள்வது எப்படி?
 91. நாற்பதினாயிரம் ரூபாய்
 92. நிழல் மனிதன்
 93. ரகசியம் (இரு பாகங்கள்)
 94. ரயில் திருடன்
 95. வள்ளுவர் பாதை.
 96. விலகிநில்
 97. வைரம்
 98. வெறி
 99. ஷாக்
 100. 153
 101. 12 ஓ கிளாக்

சங்கர்லால் துப்பறியும் கதைகள்[2][தொகு]

 1. இரகசியம்
 2. இருண்ட இரவுகள்
 3. இன்னொரு செருப்பு எங்கே?
 4. எஸ்.எஸ்.66
 5. கொலை எக்ஸ்பிரஸ்
 6. சங்கர்லால்
 7. சங்கர்லால் தன் வீட்டில்; 1955 சூன்; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; பக்.80.
 8. சங்கர்லால் துப்பறிகிறார்
 9. சங்கர்லால் வந்துவிட்டார்!
 10. சங்கர்லாலுக்குச் சவால்
 11. செய்யாத குற்றம் செய்தவர் யாரே?
 12. டோக்கியோ ரோஜா
 13. பாரிஸில் சங்கர்லால்
 14. பெர்லினில் சங்கர்லால்
 15. மர்மத்தீவு
 16. மீண்டும் சங்கர்லால்
 17. நாற்பதினாயிரம் ரூபாய்
 18. நேபிள்ஸில் சங்கர்லால்
 19. விடியாத இரவுகள்
 20. ஜெனிவாவில் சங்கர்லால்
 21. ஹலோ சங்கர்லால்
 22. ஹாங்காங்கில் சங்கர்லால்

தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்[2][தொகு]

 1. கெய்ரோவில் தமிழ்வாணன்
 2. சிகாகோவில் தமிழ்வாணன்
 3. சி.ஐ.டி. 009
 4. டயல்
 5. டோக்கியோவில் தமிழ்வாணன்
 6. பிடி 22
 7. பிராங்க்பர்ட்டில் தமிழ்வாணன்
 8. ஹவாயில் தமிழ்வாணன்

முழுநீளப் படக்கதை[2][தொகு]

 1. எம்.டி.பி.7171
 2. கத்திரிக்காய் கண்டுபிடித்தான்!
 3. திரும்பி வரவில்லை!

நீள்கதைகள்[தொகு]

 1. குறுக்குவழி, கல்கண்டு 9.11.67 பக்.15 - 27

நாடகங்கள்[தொகு]

 1. பகைவென்ற பாண்டியன்
 2. பூலித்தேவன்

கட்டுரைகள்[தொகு]

(அகரவரிசையில்)

 1. அழகாய் இருப்பது எப்படி?
 2. இயற்கை வைத்தியம்
 3. உங்கள் பிரச்னைகளை நீங்களே தீர்த்துக்கொள்வது எப்படி?
 4. ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்வது எப்படி?
 5. கீதைகாட்டும் பாதை
 6. குடும்பம் நடத்துவது எப்படி?
 7. கொள்ளைக்காரன் கெட்டிபொம்மு
 8. சிக்கனமாய் இருப்பது எப்படி?
 9. ஞாபகசக்தி இல்லையா?
 10. நமக்கு நாமே எதிரிகள்
 11. நம்மிடமுள்ள குறைகள்
 12. நல்ல தூக்கம் இல்லையா?
 13. நாம் முன்னுக்கு வராதற்கு நாமே காரணம்
 14. நாம் வாழ்வதெல்லாம் வாழ்வா?
 15. நாளைக்கே சாகத் தயாரா?
 16. நூறு வருஷங்கள் வாழ்வது எப்படி?
 17. துன்பமே போ!
 18. பணக்காரனாக வழி
 19. பணத்தொல்லைகளைப் போக்கப் பல வழிகள்
 20. பணம் வேண்டுமா?
 21. பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக்கொள்வது எப்படி?
 22. மதமும் மன அமைதியும்
 23. வயதானால் என்ன?
 24. வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி?
 25. வீட்டுக்குறிப்புகள்

வேறு துறைகள்[தொகு]

 • "தமிழ்ப் பற்பொடி" என்ற பெயரில் பற்பொடியை தயாரித்து விற்பனை செய்தார்.[3]
 • தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்கள் இரண்டை பிள்ளைப்பாசம், துடிக்கும் துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.[3]
 • காதலிக்க வாங்க என்ற தமிழ்த் திரைப்படத்தை தானே கதை, வசனம் எழுதித் தயாரித்து வெளியிட்டார்.[3]

மணிமேகலைப் பிரசுர வெளியீடுகள்[தொகு]

 1. ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாக விரும்புகிறீர்களா?

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன், கலைமாமணி விக்கிரமன், தினமணி, நவம்பர் 21, 2010
 2. 2.0 2.1 2.2 2.3 மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தவிலைப் பட்டியல்_2001 ஆகஸ்ட்
 3. 3.0 3.1 3.2 ச. சுந்தரதாஸ் (நவம்பர் 2015). "இளைஞர்களைக் கட்சியில் சேர விடாமல் தடுத்த தமிழ்வாணன்". தமிழோசை அவுஸ்திரேலியா. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்வாணன்&oldid=3752566" இலிருந்து மீள்விக்கப்பட்டது