இளையான்குடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளையான்குடி வட்டம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக இளையான்குடி நகரம் உள்ளது. இவ்வட்டததில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் இளையான்குடி, சாலைகிராமம், சூராணம், தாயமங்கலம், திருவுடையார்புரம் என 5 உள்வட்டங்களும், 52 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 109,267 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 53,988 ஆண்களும், 55,279 பெண்களும் உள்ளனர். 28,395 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 77.3% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.32% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10267 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,010 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24,261 மற்றும் 3 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 69.94%, இசுலாமியர்கள் 17.56%, கிறித்தவர்கள் 12.37%% & பிறர் 0.03% ஆகவுள்ளனர். [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையான்குடி_வட்டம்&oldid=2729975" இலிருந்து மீள்விக்கப்பட்டது