கானாடுகாத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கானாடுகாத்தான்
கானாடுகாத்தான்
இருப்பிடம்: கானாடுகாத்தான்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°10′29″N 78°46′54″E / 10.174754°N 78.781586°E / 10.174754; 78.781586ஆள்கூற்று: 10°10′29″N 78°46′54″E / 10.174754°N 78.781586°E / 10.174754; 78.781586
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் G. லதா இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

5 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு [convert: invalid number]

கானாடுகாத்தான் (ஆங்கிலம்:Kanadukathan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், [காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள செட்டிநாடு தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி இராமேஸ்வரம் - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். 210-இல் உள்ளது

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,362 வீடுகளும், 5,275 மக்கள்தொகையும் கொண்டது. [4] இது 8 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

சிறப்புகள்[தொகு]

பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகராமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது

காண வேண்டிய இடங்கள்[தொகு]

சிவகங்கை மாவட்டம் கானடுகாத்தான் அருகில் உள்ள பெரியகோவில் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடனுறை சௌந்தரநாயகி அம்பாள் கோவில் மிக சக்தி வாய்ந்த திருத்தலம் ஆகும். இந்த கோவில் உள்ள சிவலிங்கம் சுயம்பு ஆக தோன்றியவர்.மேலும் இந்த ஊரை சுற்றி கரை மேல் அய்யனார் கோவில், பொன்னழகி அம்மன் கோவில், வரத ராஜபெருமாள் கோவில், முனிஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களும் உள்ளன.குழந்தை பேறு இல்லாதவர்கள்,கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள்,திருமணம் ஆகாதவர்கள் இந்த ஊரில் உள்ள தெய்வங்களை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மை அடைவதாகக் கூறப்படுகிறது.

வழி:காரைக்குடி வருபவர்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்கவேண்டும்.திருச்சியில் இருந்து வருபவர்கள் காரைக்குடி அல்லது தேவகோட்டை பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்க வேண்டும்.இந்த ஊரை சுற்றி கலைநயம் மிக்க நகரத்தார் வீடுகளும் உள்ளன.

காட்சியகம்[தொகு]

கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை நுழைவுவாயில் - செட்டிநாடு கட்டிடக்கலை.
வழக்கமான செட்டிநாடு வீட்டின் உட்புறம் - செட்டிநாடு கட்டிடக்கலை.
செட்டிநாடு வீட்டின் மேற்கூரை - செட்டிநாடு கட்டிடக்கலை.
செட்டிநாடு வீட்டின் உள்ளேயுள்ள சாப்பிடும் அறைe - செட்டிநாடு கட்டிடக்கலை.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. Kanadukathan Population Census 2011
  5. [ http://www.townpanchayat.in/kanadukathan பேரூராட்சியின் இணையதளம்]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானாடுகாத்தான்&oldid=2674993" இருந்து மீள்விக்கப்பட்டது